SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டையார்பேட்டை சாலைகளில் கழிவுநீர் வெள்ளம் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

2017-08-13@ 00:25:41

* பலர் மருத்துவமனையில் அனுமதி * பீதியில் பொதுமக்கள்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதிகளில் சுகாதார சீர்கேடால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை  தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தண்டையார்பேட்டை சிவாஜி நகர், அஜீஸ் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு  30க்கும் மேற்பட்ட ெதருக்கள் உள்ளன. இங்குள்ள கால்வாய்கள் முறையான பராமரிப்பின்றி தூர்ந்துள்ளதால், வீடுகளில் இருந்து  வெளியேறும்  கழிவுநீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவி வருகிறது. இதுவரை 30க்கும்  மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் சிலர்  தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் சிவாஜி நகரை சேர்ந்த தேவன் (43), தனசெழியன் (21)  மற்றும் பலர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதால், அப்பகுதி மக்கள்  பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தண்டையார்பேட்டையில் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கி  வருகிறது. தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால், பலருக்கு மர்ம காய்ச்சல்  ஏற்பட்டு வருகிறது.  

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள டாக்டர்கள்,  முதலில் ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெறுங்கள், என்று கூறி அனுப்பி விடுகின்றனர்.  எனவே, மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கால்வாய் அடைப்பை  சீரமைக்கவும், கொசு மருந்து அடிக்கவும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X