SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாரி டிரைவர்கள் போராட்டம்

2017-08-13@ 00:25:37

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் தேசிங்கு (40), குடிநீர் ஒப்பந்த லாரி டிரைவர். தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை  நகரை சேர்ந்தவர் ஜெயசூர்யா, லாரி கிளீனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு லாரியில் குடிநீர் ஏற்றிக்கொண்டு கொருக்குப்பேட்டை மீனாம்பாள்  நகருக்கு சென்றனர்.அங்கு, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆட்டோவை அகற்றியபோது, ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 7 பேர், தேசிங்கு,  ஜெயசூர்யா ஆகியோரை அடித்து உதைத்தனர். இதை கண்டித்து ஒப்பந்த லாரி டிரைவர்கள் சுமார் 40 பேர் தண்டையார்பேட்டை குடிநீரேற்று நிலையம் முன்பு நேற்று திடீர் போராட்டம் நடத்தினர்.  ஆர்கே.நகர் போலீசார்  விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்