SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் முதுகில் தமிழக அரசு குத்திவிட்டது: அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

2017-08-13@ 00:24:44

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னையால் தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெறப்பட்டது. ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி அரசு, நீட் தேர்வுக்கு  விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய  அரசுக்கு போதிய அழுத்தம்  கொடுக்கவில்லை.  

ராமதாஸ்(பாமக):  தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படுவது உறுதி என்று கூறி மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி  வந்த பினாமி அரசு, அதை நிறைவேற்றாததன் மூலம் மாணவர்களை நட்டாற்றில் விட்டு விட்டது. மாணவர்களின் முதுகில் குத்தி விட்டது.  ஆட்சியாளர்களின் தலைக்கு மேல் ஊழல் குற்றச்சாட்டுகள், வருமானவரி சோதனைகள், ஆட்சிக்கு ஆபத்து என ஏராளமான கத்திகள் தொங்கிக்  கொண்டிருந்ததால், தங்கள் தலையில் கத்தி விழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக மாணவர்களை பினாமி அரசு பலிகொடுத்திருக்கிறது. இதை  மாணவர்கள் சமுதாயம் மன்னிக்காது.

ஜி.கே.வாசன்(தமாகா): தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முயற்சிகள் நடைபெற்றன. இச்சூழலில் மாநில பாடத்திட்டத்தில் படித்த  மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 85 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை செல்லாது  என உயர் நீதிமன்றம் அறிவித்தது. இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று நடைபெற்ற போது  இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது 85 சதவீத இட ஒதுக்கீடாவது கிடைக்கும் என்ற எதிர்பார்த்து காத்துக்கிடந்த மாணவ,  மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இனியும் மத்திய அரசு இந்த பிரச்னையில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் தமிழக மாணவர்கள் நலன் கருதி குடியரசுத் தலைவரிடம் இருந்து நீட்  தேர்வு முறைக்கு விலக்கினை பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-12-2017

  13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • Christmasstarlights

  கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

 • RAJINI_FANS

  நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள்: அவரை காண வந்த ரசிகர்களை அனுமதிக்காத போலீசார்!

 • seaplaneModi

  குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

 • Chennai_ThickFog

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்த கடும் பனி மூட்டம்: விமானங்கள் ரத்து, வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்