SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை எதிரொலி எம்எல்ஏக்களை இழுக்க தினகரன் தீவிரம்: ஆதரவாளர்கள் மூலம் பணம் பாய்கிறது

2017-08-13@ 00:24:32

சென்னை: எடப்பாடி, பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்எல்ஏக்களை இழுக்க தினகரன் ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காக  கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பரபரப்பு எழுந்துள்ளது.அதிமுக 3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில்,  சென்னையில் நடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டத்தில், தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தை தொடர்ந்து தினகரன் அணியினர் கடும் ஆவேசத்தில் உள்ளனர். தினகரனை நீக்கிய எடப்பாடி அணிக்கு பாடம் புகட்ட வேண்டும்.  இதற்காக எடப்பாடியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு  உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சையில் முகாமிட்டுள்ள தினகரன் அளித்த பேட்டியில், தன்னை கட்சியில் இருந்து நீக்கியவர்களை 420க்கள்  (மோசடிக்காரர்கள்) என கூறினார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 420 என்பது தினகரனுக்குதான் பொருந்தும் என பதிலடி கொடுத்தார். இதன்  மூலம் எடப்பாடி தனது நேரடியான தாக்குதலை தொடங்கி வைத்து உள்ளார்.இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அப்போது இணைப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது. விரைவில் இரு அணிகளும் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. ஒரு மனு அளித்தார். அதில்  சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது, சட்ட விதிகளுக்கு விரோதமானது என அதில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடி தலைமையில் நடந்த கட்சி  நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்து மைத்ரேயன் அளித்த மனு மூலம் இரு அணிகளும் இணைந்து  செயல்படுகிறது என தினகரன் அணியினர் கருதுகிறார்கள்.

இந்நிலையில், தங்களை 2 அணியினரும் கண்டுகொள்ளவில்லை, அவர்களாக கூட்டணி அமைத்து தங்களை ஓரங்கட்டும் நடவடிக்கையில் இறங்கி  விட்டனர். அத்துடன் தன்னை 420 என்று முதல்வர் பதிலடி கொடுத்துவிட்டார். எனவே எடப்பாடி அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக  அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும், ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்களையும் எப்படியாவது தங்கள் பக்கம் திருப்பி ெகாண்டு வரவேண்டும் என  திட்டமிட்டு பணிகளை முடுக்கிவிட்டு உள்ளார். இதுதொடர்பாக, தஞ்சையில் நேற்று முன்தினம் தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி, ஒவ்வொருவருக்கும் அசைன்மென்ட்  கொடுத்து உள்ளார்.தற்போது வரை தினகரனுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேரையாவது பிடித்து விடவேண்டும்  என அவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக, கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக செலவு செய்வதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கு  பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நாளை மாலை மேலூர் அழகர்கோவில் சாலையில் தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த  கூட்டத்தின் மூலம் தினகரன் தனது பலத்தை காட்ட முடிவு செய்துள்ளார் என்பதால் இந்த கூட்டம் சாதாரணமாக போய்விடக்கூடாது. இந்த கூட்டத்தின்  மூலம் எடப்பாடி அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்களை அழைத்து வர ஏற்பாடுகள்  நடந்து வருகிறது. இதற்காக தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இவர்கள் எடப்பாடி,  ஓபிஎஸ் அணியில் உள்ள பல எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கூட்டத்துக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் அமைச்சர்களாக உள்ளனர். ராஜன் செல்லப்பா, நீதிபதி,  பெரியபுள்ளான் ஆகியோர் இதுவரை எந்த அணி என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. எனவே, அவர்களை சந்திக்கும் முயற்சியில் தினகரன்  ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், நிலக்கோட்டை தங்கதுரை, மானாமதுரை  மாரியப்பன் கென்னடி,சாத்தூர் சுப்பிரமணியன்,பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையா  ஆகியோர் பங்கேற்பதாக கூறி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சீனிவாசன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், திருவில்லிபுத்தூர் சந்திரபாபு எம்.எல்ஏ எந்த  அணியிலும் தீவிரம் காட்டாமல் உள்ளார். எனவே அவரை அழைக்க ஏற்பாடு நடக்கிறது.தேனி மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏக்களில் ஓ.பன்னீர்செல்வம் தவிர மீதமுள்ள 3 பேர் தங்கள் ஆதரவாளர்களுடன் தினகரன் கூட்டத்தில்  பங்கேற்கின்றனர்,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அதிமுக எம்.எல்.ஏக்களில் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி தென்  மாவட்டங்களை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த மாவட்டங்களில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தினகரன் ஆதரவாளர் செய்து வருகிறார்கள்.  அதிகமான எம்.எல்.ஏக்கள் தங்கள் கூட்டத்துக்கு வந்தால் தான் எடப்பாடி அணியை பணியவைக்க முடியும் என தினகரன் நம்புகிறார். எனவே அதற்கான  ஏற்பாடுகளை 2 நாளில் செய்து முடிக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது.எனவே அவர்கள் இதில் கலந்து கொள்வதுடன் தேனி மாவட்டத்தில் இருந்து அதிக ஆட்களை அழைத்து வரவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  தினகரன் அணியில் எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், பழனிசாமி அணியில் எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பது திங்கட்கிழமை  நடைபெறும் கூட்டத்தில் தெரிந்து விடும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்