SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 110 இடத்தில் எண்ணெய் கிணறுகள்: ஓஎன்ஜிசி அறிவிப்பு

2017-08-13@ 00:24:21

கும்பகோணம்: தமிழகத்தில் ஏற்கனவே முடிவான 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் என்று காரைக்கால் ஓஎன்ஜிசி அசட்  ேமலாளர் குல்பீர்சிங் தெரிவித்தார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்வு குறித்த குறுந்தகடு வெளியீடு  நிகழ்ச்சி  நடைபெற்றது. குறுந்தகடை  காரைக்கால் ஓஎன்ஜிசி அசட் மேலாளர் குல்பீர்சிங் வெளியிட , சென்னை பேசின்  மேலாளர் ராஜேந்திரன் பெற்று  கொண்டார். பின்னர் காரைக்கால் அசட் மேலாளர் குல்பீர்சிங் அளித்த பேட்டி:ஓஎன்ஜிசி மக்கள் நலனுக்காக 7 ஆண்டுகளில் ரூ.25 கோடி  செலவிட்டிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுக்கு  ராயல்டி மற்றும்  வரித்தொகையாக ரூ.2824 கோடியை ஓஎன்ஜிசி நிறுவனம்  கொடுத்துள்ளது.

தமிழகத்தில் காவிரி படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 910  கிலோ மீட்டர்  குழாய் அமைத்துள்ளது.  இந்த நிறுவனத்தின் சார்பில் கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா  எண்ணெய் பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே பல  ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில்தான் எண்ணெய் கிணறு  அமைக்கப்படவுள்ளது.  புதிய இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்கப்படவில்லை. நாகை,  கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்திற்கும்   ஓஎன்ஜிசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.தமிழக மக்களுக்கு வெறுப்பு  ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள்,   வெளிநாட்டிலிருந்து வருகின்றது. இந்த  தகவலை வைத்து  சிலர் தவறாக  பரப்பி வருகின்றனர். இதனை நிறுத்தாவிட்டால்  சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கதிராமங்கலத்தில் அமைதி  நிலவ அங்குள்ள மக்களிடம் விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். விரைவில் இதுபோன்ற கிராமங்களை   ஓஎன்ஜிசி நிறுவனம் தத்துஎடுத்துக் கொள்ளும்.  கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி  நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை. நிலத்தடி நீரின்  தரமும்  பாதிக்கப்படவில்லை. எங்களுடைய ஆய்வு மீண்டும் இதனை உறுதி செய்துள்ளது. அங்கு குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வறிக்கை   தயாரிக்கப்பட்டு வருகிறது. கதிராமங்கலத்தில் உள்ள மக்களை விரைவில் சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்