SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலும் 3 நாளுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

2017-08-13@ 00:24:18

சென்னை: வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  சென்னை தவிர்த்து வெளி மாவட்டங்களில் பெய்த மழையால் ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பருவ மழை பொய்த்துப்போன  போதும் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, ‘வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் வட  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு  நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  இந்த வாரத்தில் தொடர் மழை இருக்கும். அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களுக்கு மழை பெய்ய  வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக கடலூரில் 26 மி.மீ, அதிராமப்பட்டினம் 25 மி.மீ,  காரைக்காலில் 22 மி.மீ, சென்னை 18 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது’  என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்