SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

450 கோடி கொள்முதல் விவகாரத்தில் சிக்கல் இலவச வேட்டி சேலை டெண்டர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2017-08-13@ 00:23:39

சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படவுள்ள இலவச  வேட்டி, சேலை உற்பத்திற்கான நூல் கொள்முதல்  செய்வதற்கான ரூ.450 கோடி மதிப்பிலான  டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2018ம் ஆண்டு பொங்கலையொட்டி  வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளை தயாரிப்பதற்கான நூலைக் கொள்முதல்  செய்வதற்கான டெண்டர்  அறிவிப்பை சீருடைகள் துறை இணை இயக்குநர் கடந்த ஜூன்  22ம் தேதி வெளியிட்டார்.இந்நிலையில், இந்த அறிவிப்பை ரத்து செய்யக்  கோரி சோழபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராம் ஸ்பின்னிங் நிறுவனம் உயர்  நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது.

அதில், டெண்டர் அறிவிப்பில் பல  குளறுபடிகள் உள்ளன. அதனால் டெண்டர் அறிவிப்பை  ரத்து செய்ய வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:தமிழகத்தில்  இலவச வேட்டி, சேலைகளை வழங்கும் திட்டத்தின்கீழ் வரும் 2018ம் ஆண்டிற்கான  பாலியஸ்டர் சேலை மற்றும் பாலியஸ்டர்  வேட்டிகள் நெய்வதற்கான நூல் கொள்முதல்  குறித்து ரூ.450 கோடி மதிப்பிலான டெண்டர் கடந்த ஜூன் 22ம் தேதி  வெளியிடப்பட்டுள்ளது. இந்த  டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் டெண்டர்  விண்ணப்பங்களை சமர்பிக்கும் இறுதி தேதி 2017 ஜூலை 7ம் தேதி என்று அந்த  அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது.

பொதுவாக டெண்டர் விளம்பரம் பத்திரிகைகளில்  மட்டுமல்லாமல் மாநில டெண்டர் புல்லட்டினிலும் வெளியிடப்பட வேண்டும். ரூ.  50 கோடிக்கும்  அதிகமான கொள்முதல் டெண்டர் என்றால் தமிழ்நாடு வெளிப்படையான  டெண்டர் சட்டத்தின்கீழ் டெண்டர் அறிவிப்புகள் இந்தியன் டிரேட் ஜர்னல்   மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும். விதிமுறைகளின்படி ரூ. 2 கோடிக்கும் அதிகமான டெண்டராக இருந்தால் டெண்டர்   விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் தரப்பட வேண்டும். அந்த கால  அவகாசம் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர்  தரப்பில்  வாதிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில், காலதாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற  காரணத்திற்காகத்தான் டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம்   குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இலவச வேட்டி,  சேலை வழங்குவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக  இயந்திரத்தனமாக அரசு  செயல்படக்கூடாது.

வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்கீழ்  குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும். ரூ 2 கோடிக்கும்  அதிகமான டெண்டரை  வெளியிடும்போது அதில் பங்கேற்பவர்களுக்கு 30 நாட்கள் கால  அவகாசம் தரப்பட வேண்டும்.எனவே, இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில்  கூறப்படும் விளக்கங்களை இந்த நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, கடந்த ஜூன் 22ம்  தேதி  வெளியிடப்பட்ட இலவச வேட்டி, சேலைக்கான நூல் கொள்முதல் டெண்டர்  அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும் வெளிப்படை தன்மையுடன்  இதே டெண்டரை  மீண்டும் வெளியிட வேண்டும் இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2017

    23-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்