SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை எதிரொலி: எம்.எல்.ஏக்களை இழுக்க தினகரன் தீவிரம்

2017-08-12@ 20:18:16

சென்னை: எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்எல்ஏக்களை இழுக்க தினகரன் ஆதரவாளர்கள் தீவிரமாக பேசி வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மாஅணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டத்தில், தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை தொடர்ந்து தினகரன் அணியினர் கடும் ஆவேசத்தில் உள்ளனர். தினகரனை நீக்கிய எடப்பாடி அணிக்கு பாடம் புகட்ட வேண்டும். இதற்காக எடப்பாடியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக தஞ்சையில் முகாமிட்டுள்ள தினகரன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், தன்னை கட்சியில் இருந்து நீக்கியவர்களை 420க்கள்(மோசடிகாரர்கள்) என கூறினார். இதற்கு நேற்று பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 420 என்பது தினகரனுக்கு தான் பொருந்தும் என பதிலடி கொடுத்தார். இதன் மூலம் எடப்பாடி தனது நேரடியான தாக்குதலை நேற்று தான் தொடங்கி வைத்துஉள்ளார்.

இது தினகரன் ஆதரவாளர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இணைப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது. விரைவில் இரு அணிகளும் இணையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரு அணிகள் இணைந்தால் கட்சி பதவி, அமைச்சரவை பதவி பற்றியும் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி நேற்று இரவு சென்னை திரும்பினார்.

இதற்கிடையே நேற்று டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. ஒரு மனு அளித்தார். அதில் சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது, சட்ட விதிகளுக்கு விரோதமானது என அதில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடி தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்து மைத்ரேயன் அளித்த மனு மூலம் இரு அணிகளும் இணைந்து செயல்படுகிறது என தினகரன் அணியினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் தங்களைப்பற்றி 2 அணியினரும் கண்டுகொள்ளவில்லை, அவர்களாக கூட்டணி அமைத்து தங்களை ஓரங்கட்டும் நடவடிக்கையில் இறங்கி விட்டனர். அத்துடன் தன்னை 420 என்று முதல்வர் பதிலடி கொடுத்துவிட்டார்.

எனவே எடப்பாடி அணிக்கு பாடம் புகட்ட வேண்டும். இதற்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும், ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களையும் எப்படியாவது தங்கள் பக்கம் திருப்பி ெகாண்டு வரவேண்டும் என திட்டமிட்டு பணிகளை முடுக்கிவிட்டு உள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் நேற்று தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி, ஒவ்வொருவருக்கும் அசைன்மென்ட் கொடுத்து உள்ளார். இன்று அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை இழுத்து வரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். தற்போதுவரை தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேரையாவது பிடித்து விடவேண்டும் என அவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக செலவு செய்வதாகவும், எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்வரும் 14ம் தேதி(திங்கள்) மாலை மேலூர் அழகர்கோயில் சாலையில் தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் மூலம் தினகரன் தனது பலத்தை காட்ட முடிவு செய்துள்ளார் என்பதால் இந்த கூட்டம் சாதாரணமாக போய்விடக்கூடாது. இந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இவர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் அணியில் உள்ள பல எம்.எல்.ஏக்களை சந்தித்து கூட்டத்துக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்