SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: '35 ஏ'-வை நீக்கினால் விளைவு மோசமாகும் என ஹூரியத் அமைப்புகள் எச்சரிக்கை

2017-08-12@ 18:38:55

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35 ஏ பிரிவை நீக்க நடக்கும் முயற்சிகளை எதிர்த்து மாநிலத்தில் முழு அடைப்பு நடக்கிறது. ஹூரியத் அமைப்புகள் விடுத்த அழைப்பை ஏற்று தலைநகர் ஸ்ரீநகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வாகனமும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆங்காங்கே ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வாகனங்கள் மட்டும் சாலைகளில் ரோந்து செல்கின்றன.

பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் மூடங்கியுள்ளன. காஷ்மீரின் குடிமக்கள் யார் என்பதை அந்த மாநில அரசே முடிவு செய்யலாம் என அரசியலமைப்பு சட்டத்தின் 35 ஏ பிரிவு கூறுகிறது. இதனால் வெளிமாநிலத்தவர் ஙே்கு நிரந்தரமாக குடியிருக்கவும் சொத்துக்களை வாங்கவும் முடியாது. இந்த பிரிவை நீக்க வேண்டும் என தன்னார்வ நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த பிரிவை அகற்றினால் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என ஹூரியத் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்