SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரத்யாதவின் பதவி பறிப்பு: நிதிஷ்குமார் பா.ஜ.க.வின் கைப்பாவை என்று லாலு பிரசாத் காட்டம்

2017-08-12@ 17:21:28

பாட்னா: மூத்த தலைவர் சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம் மாநிலங்களவை குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாகஆர்சிபி சிங் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி சரத் யாதவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி லாலு பிரசாத்தின் கூட்டணியை முறித்ததில் இருந்து நிதிஷ்குமார் பீகார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக சரத்யாதவ் குற்றம்சாட்டி வருகிறார்.

நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக மாறிவிட்டதை இதுகாட்டுவதாக முன்னாள் கூட்டாளி லாலுபிரசாத் கண்டனம் தெரிவி்த்துள்ளார். சரத்யாதவின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மற்றொரு எம்.பி.யான அலி அன்வரையும் நிதிஷ்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். சோனியாகாந்தி நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்த மறுநாளே சரத்யாதவ் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் முடிவை வரும் 19-ம் தேதி நிதிஷ்குமார் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்