SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னிய நேரடி முதலீடு விவகாரம் மக்களவையில் 5ம் தேதி ஓட்டெடுப்ப

2012-11-30@ 00:46:13

புதுடெல்லி : அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மக்களவை தலைவர் மீரா குமார் அனுமதித்துள்ளார். 5ம் தேதி ஓட்டெடுப்பு நடக்கிறது. இதையடுத்து, 4 நாட்களாக முடங்கிய மக்களவையில் நேற்று சுமுக நிலை திரும்பியது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி பா.ஜ. செய்த அமளியால் நாடாளுமன்றம் 4 நாட்கள் முடங்கியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் பேச்சு நடத்தினார். ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு அரசு தயார் என்றும் இது தொடர்பாக மக்களவை தலைவரிடம் தெரிவிக்க இருப்பதாகவும் கமல்நாத் கூறினார்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது, அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் விதி 184ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு அனுமதி அளிப்பதாகவும் அவை சுமுகமாக நடக்கும் என்று நம்புவதாகவும் அவைத் தலைவர் மீரா குமார் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, மக்களவை தலைவரின் முடிவை வரவேற்பதாகவும் அவை சுமுகமாக நடக்க ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்கியது. எனினும், கேள்வி நேரம் முடிந்த பிறகு, மானிய விலையில் ஆண்டுக்கு 24 கேஸ் சிலிண்டர்கள் வழங்க கோரியும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்தும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

5ம் தேதி ஓட்டெடுப்பு: அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் டிசம்பர் 4, 5 தேதிகளில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவாதம் முடிந்து பிரதமர் பதிலுரைக்கு பின் 5ம் தேதி ஓட்டெடுப்பு நடக்கிறது. கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மாநிலங்களவையில் விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு தேதி முடிவு செய்யப்படும்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்தி பா.ஜ.வினர் கோஷமிட்டனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு அளிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அமளி நீடித்ததால் முதலில் பகல் 12 மணி வரையும் பின்னர், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அரசு சம்மதம்: இதனிடையே, நேரடி அன்னிய முதலீடு பற்றி மாநிலங்களவையிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரியிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கமல்நாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாடி கண்ணாமூச்சி

மாநிலங்களவையில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தால் அரசை எதிர்த்து ஓட்டளிப்போம் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் வேறு முடிவை எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, கடந்த காலங்களில் இதுபோன்று நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம் அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர்  முலாயம் சிங் யாதவ் கூறினார்.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 244 இடங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 94 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. 9 எம்.பி.க்களை கொண்ட சமாஜ்வாடி கட்சியின் அறிவிப்பு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, எங்கள் முடிவை அவையில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்