SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடு செல்வோருக்கு உதவும் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்: சீன நிறுவனம் தயாரிப்பு

2017-07-31@ 12:03:26

ஷென்சேன்: டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர். ஐ.ஓ.எஸ் கொண்ட ஆப்பிள் போன் அல்லது ஐ பேடில், டைம் கெட்டிலின் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உரையாடும் இருவரும் தங்கள் மொழியைப் பதிவு செய்து கொள்கின்றனர்.

அவர்கள் பேசத் தொடங்கிய மூன்று விநாடி இடைவெளியில், உரையாடலை மொழிமாற்றம் செய்து புளூடுத் தெரிவிக்கிறது. இதனால், வெளிநாடு செல்வோருக்கு மொழிப் பிரச்சனை இருக்காது என்று டைம்கெட்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொழிமாற்றம் செய்வதற்கு ஆகும் நேர இடைவெளியை, மூன்று வினாடியில் இருந்து ஒரு விநாடியாகக் குறைக்க உள்ளதாகவும், ஆங்கிலம், சீன, ஸ்பானிய, ஜப்பானிய மொழிகளோடு மேலும் பல மொழிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்