SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் மாரடைப்பால் காலமானார்

2017-07-28@ 00:13:17

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில்  ஒருவருமான தரம்சிங் (80) மாரடைப்பால் காலமானார்.
கர்நாடகாவில் முதல்வராக பதவி வகித்த தரம்சிங், காங்கிரஸ் தலைவர்களால் ‘அஞ்சா நெஞ்சம் படைத்தவர்’  என்று புகழப்பட்டவர்.   இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்த நோய்களால்  அவதிப்பட்டு வந்ததால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு  சதாசிவ நகரில் வசித்து வந்த அவருக்கு நேற்று காலை 10 மணியளவில் நெஞ்சுவலி  ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை  அழைத்துச் சென்றனர். அங்கு  பரிசோசித்த டாக்டர்கள் தரம்சிங்  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

ஹாவேரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த முதல்வர்  சித்தராமையா, தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக  ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வந்து தரம்சிங்கின்  உடலுக்கு அஞ்சலி  செலுத்தினார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநில அமைச்சர்கள் நேரில்  வந்து அஞ்சலி செலுத்தினர்.  கல்புர்கி மாவட்டம், ஜேவர்கி தாலுகா, நெலோகி  கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இன்று  முழு அரசு மரியாதையுடன்  தரம்சிங் உடலுக்கு இறுதி சடங்கு நடக்கிறது.  மறைந்த தரம்சிங்குக்கு மனைவி பிரபாவதி சிங், மூத்த  மகனும், பேரவை உறுப்பினருமான டாக்டர் அஜய்சிங், இளைய மகனும், மேலவை  உறுப்பினருமான விஜய்சிங், மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்