SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நள்ளிரவு முதல் அதிரடி அமல்: சிகரெட் மீது ரூ.5,000 கோடி கூடுதல் வரி விதிப்பு: சில்லரை விலை உயராது என்கிறது மத்திய அரசு

2017-07-18@ 01:48:07

புதுடெல்லி,: சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  ஜிஎஸ்டி கவுன்சிலின் அவசர கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சிகரெட் மீதான வரி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு பேட்டியளித்த அருண்ஜெட்லி, சிகரெட் மீதான வரியை உயர்த்தியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்தார்.   கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வகைப்படுத்தியபோது, சிகரெட் 28 சதவீதத்துக்குள் சேர்க்கப்பட்டது.

இதில், 5 சதவீத செஸ் வரி மற்றும் ஆயிரம் சிகரெட்களுக்கான நிலையான வரியாக 65 மி.மீ.க்கு குறைவான பில்டர் மற்றும் பில்லர் அல்லாத சிகரெட்களுக்கு ரூ.1,591, 65 மி.மீ.க்கு மேல் நீளமுள்ள சிகரெட்களுக்கு ரூ.2,126 முதல் ரூ.4,170 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டது.  நேற்றைய முடிவின்படி, இந்த நிலையான வரியில் தற்போது ரூ.485 முதல் ரூ.792 வரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியை விட குறைவு. எனவே சில்லரை விலையில் சிகரெட் விலை உயராது. நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை மட்டுமே குறைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய வரியை விட குறைவு என்பதால், சிகரெட் உற்பத்தியாளர் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளித்து விலையை குறைக்கலாம். இது அவர்களின் முடிவுக்கு உட்பட்டது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும் எனவும், இதில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்துதலில் உள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்