SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய ரூபாய் நோட்டை மாற்ற மீண்டும் வாய்ப்பு தர முடியாது: மத்திய அரசு கைவிரிப்பு

2017-07-18@ 01:46:19

புதுடெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது குறித்த வழக்கில், நியாயமான காரணம் இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே பழைய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அவற்றை மாற்றிக் கொள்ள போதுமான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். அரசு போதுமான அளவுக்கு நன்கு ஆராய்ந்து கால அவகாசம் அளித்தது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்