SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தபின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

2017-07-18@ 01:45:32

* பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இதுவரை இரண்டு முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 2014 நவம்பரில் நடந்த விரிவாக்கத்தின் போது மனோகர் பரிக்கர் உள்பட 21 புதிய முகங்கள் அமைச்சராகினர்.
* 2016 ஜூலையில் 2வது முறை மாற்றம் செய்யப்பட்டது. அதில், ஸ்மிருதி இராணியிடம் இருந்த மனிதவள மேம்பாட்டுத்துறை பிடுங்கப்பட்டு பிரகாஷ் ஜவ்டேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர், கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் அம்மாநில முதல்வராக பதவி ஏற்றார். இதனால், பாதுகாப்பு துறையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வருகிறார். இதேபோல், சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் அனில் தவே கடந்த மே மாதம் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் இத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 முக்கிய துறைகளும் கூடுதலாக மற்ற 2 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். எனவே, அவரிடம் உள்ள துறையும் கூடுதலாக இன்னொரு அமைச்சரிடம் ஒதுக்கப்படும். இதனால் பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக, அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தபின் இந்த மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. அப்போது,புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க அவர் முடிவு எடுத்துள்ளார். குறிப்பாக, இந்த ஆண்டு கடைசி மற்றும் 2018ல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் குஜராத், கர்நாடக மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்