SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி: பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா விரும்பவில்லை

2017-07-18@ 01:42:18

புதுடெல்லி: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும்  பாகிஸ்தான் மீது பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா விரும்பவில்லை இந்திய ராணுவ இயக்கத்தின் தலைமை இயக்குநர் ஏ.கே.பட் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி சாஹிர் ஷாம்சத் மிர்சாவுடன் தொலைபேசி மூலமாக நடத்திய உரையாடலில் பட் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் கூறியதாவது:

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி தொலைபேசி மூலமாக ஏ.கே.பட்டிடம் பேசினார். அப்போது, ‘பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், எல்லையில் அமைதியை மட்டுமே இந்தியா விரும்புகிறது’ என்று பட் அவரிடம் தெரிவித்தார்.

பத்து நிமிடங்கள் நீடித்த இந்த தொலைபேசி உரையாடலில், தங்கள் நாட்டு ராணுவம் மீது கடந்த வாரத்தில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பட், ‘ஊடுருவல் முயற்சியை முறியடிக்கவே இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார். இவ்வாறு ஆனந்த் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்