SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டிரைக்கில் ஈடுபட முயன்றதாக பச்சையப்பன் கல்லூரியில் 65 மாணவர்கள் சஸ்பெண்ட்: கல்லூரி நிர்வாகம் அதிரடி

2017-07-18@ 01:17:25

சென்னை: ஸ்டிரைக்கில் ஈடுபட முயன்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி உள்ளது. இங்கே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மாணவர்கள் என்ற போர்வையில் வெளிநபர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் புகுந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.  அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்தில் நுழைய முடியும் என்றும் அதுவும் காலை 9.30 மணிக்குள் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டது.
 
ஆனாலும், சில நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறந்தபோது வெளியாட்கள் சிலருடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த மாணவர்கள் அங்கிருந்த சிலைக்கு மாலை  அணிவிக்க முயன்றனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்தது. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லூரி முதல்வர் காளிராஜ் தாக்கப்பட்டார். அவருடைய கார் கண்ணாடி மற்றும் கல்லூரிக்கு சொந்தமான சில பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.  இந்நிலையில், அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிப்பவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவருமான வெங்கடேசன் (24) தலைமையில் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதையறிந்த கல்லூரி நிர்வாகம் வெங்கடேசன் உட்பட 65 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. ஆனால், அவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 35 பேரை மட்டும் தங்களுடைய பெற்றோருடன் நாளை (இன்று) கல்லூரிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் பெற்றோருடன் வரும் பட்சத்தில் 35 பேரை மட்டும் கண்டித்து சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X