SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்தது லாரி: டிரைவர் கைது

2017-07-18@ 01:15:30

சென்னை: ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு - நேரு சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (40). சென்ட்ரிங் தொழிலாளி.  நேற்று முன்தினம் இரவு இவர், மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மீது இடி விழுந்ததை போன்று பயங்கர சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த செல்வம், வெளியே வந்து பார்த்தார். அப்போது லாரி ஒன்று வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளிவிட்டு பைக்கை நொறுக்கி, திண்ணையை உடைத்துக்கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரி டிரைவர் நாராயணவனத்தை சேர்ந்த ஜெயராமையா (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் கோடூரில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு எண்ணூரில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பியபோது லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வீட்டின் மீது ஏற்றி விட்டதாக  தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-07-2017

    27-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • INDONEAIabatACCI

    இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • SKYtainCHIANNN

    சீனாவில் அதிவேக தொங்கும் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

  • 18yearVICTORYACELABE

    கார்கில் வெற்றியின் 18ஆவது ஆண்டு கொண்டாட்டம் : 1999 ஆம் ஆண்டு நடந்த போரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணப் படங்கள்

  • kargil_18victoryy

    கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்