SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில்வே பாதைக்காக வீடுகள் அகற்றம் மாற்று இடம் வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

2017-07-18@ 01:12:58

திருவொற்றியூர்: ரயில்வே பாதைக்காக வீடுகள் அகற்றப்பட்டதால், தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை ரயில்வே தண்டவாளத்தின் 4வது பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, திருவொற்றியூர் அருகே ஒத்தவாடை தெருவில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்ட்டு இருந்த 350க்கு மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி மக்கள் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் படிப்பு, தொழில், வியாபாரம் என அனைத்தும் பாதிக்கப்படும் என்றும், எர்ணாவூர் சுனாமி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் 150க்கு மேற்பட்டோர் திருவொற்றியூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். ரயில்வே பாதை அமைப்பதால் பாதிக்கப்படும் ஒத்தவாடை தெரு மக்களுக்கு சுனாமி குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், அவர்களது கோரிக்கை மனுவை, தாசில்தார் செந்தில்நாதனிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்