SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரிசூலம் ராணுவ மைதானத்தில் வாலிபர் சடலம்: போலீஸ் விசாரணை

2017-07-18@ 01:10:48

ஆலந்தூர்: திரிசூலம் ராணுவ மைதான எல்லைக்குள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. மீனம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி வாலிபர் சாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திரிசூலம் மலை அடி வாரத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் உள்ளது. இந்த மைதானத்திற்குள் நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடப்பதாக அப்பகுதி மக்கள் அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.   

ராணுவ வீரர்கள் கொடுத்த புகாரின்படி, மீனம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் சடலத்தை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில், பல்லாவரத்தை சேர்ந்த பார்த்திபன் (30) என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார், குடிபோதையில் இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு சடலத்தை வீசி விட்டு சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்