SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு: கொசு உற்பத்தி மையமாகும் கால்வாய்கள்

2017-07-18@ 01:09:33


* தூர்வாரும் பணியில் அலட்சியம்
* சுற்றுப்புற பகுதி மக்கள் அவதி

சென்னை: கால்வாயில் ஆகாய தாமரை அகற்றும் பணியை மேற்கொள்ளாமல் சென்னை மாநகராட்சி அலட்சியமாக உள்ளதால், கொசு உற்பத்தி மையமாக மாறி சுற்றுப்புற பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை ஒட்டி கால்வாய் செல்கிறது. மாநகராட்சி சார்பில் தூர்வாரும் பணிகள் பல மாதங்களாக நடைபெறாததால் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும், ஆங்காங்கே குப்பை கழிவுகளும் தேங்கி கிடக்கின்றன. குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக அப்புறப்படுத்தவில்லை.  இதனால், கால்வாயில் தண்ணீர் ஓட்டம் இன்றி கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.  

இதுமட்டுமின்றி, கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளது. கால்வாயை ஒட்டி பல நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. கொசு உற்பத்தி காரணமாக பொதுமக்கள் மர்ம காய்ச்சலினால் பாதிக்கக்கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது.  இதேபோல், சென்னை முழுவதும் பெரும்பாலான கால்வாய்களில் பல மாதங்களாக ஆகாய தாமரைகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகமாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:  சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கால்வாய்களில் ஆகாய தாமரைகள் படர்ந்துள்ளன. இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதில்ைல. இதனால், கொசு உற்பத்தி அதிகமாகி வருகிறது. கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம்  பலமுறை முறையிட்டும் கால்வாயில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படல்லை. அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்.குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் கொசு உற்பத்தியால் தொடர்ந்து காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, பெரிய அளவில் இல்லாத காரணத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவே, பருவமழை காலமாக இருந்தால் தண்ணீர் ஓட்டம் இன்றி, பெரும் பாதிப்பு ஏற்படும். இவற்றை அதிகாரிகள் உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்