SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்த அமைச்சர்கள் தகுதியிழப்பு வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

2017-07-18@ 00:51:13

மதுரை: அமைச்சர்களை தகுதி இழப்பு செய்யக்கோரும் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆணழகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அமைச்சர்களின் இந்த செயலை முதல்வரும் கண்டிக்கவில்லை.
எனவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவர்களது எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி இழப்பு ெசய்ய வேண்டுமென, சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் ஆகியோரிடம் மனு அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மனுவை கவர்னருக்கு அனுப்பி, அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகிேயார் நேற்று விசாரித்தனர். அப்போது மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘மக்கள் பிரதிநிதிகளை தகுதியிழப்பு செய்யக்கோரி யார் வேண்டுமானாலும் மனு செய்யலாம். அவர்களது மனுவை முற்றிலும் பரிசீலித்து கவர்னர் மட்டுமே முடிவெடுக்க முடியும். முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து ேகட்க வேண்டுமென ஒரு வழக்கில், கடந்த 1965ல் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது’ என்றார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘எந்த அடிப்படையில் தகுதி இழப்பு செய்ய கோருகிறீர்கள்’ என்றனர். மனுதாரர் வக்கீல், ‘அதிமுகவின் செய்தி தொடர்பாளரான கவுரி சங்கர், சிறையிலுள்ள சசிகலா உத்தரவுப்படியே அரசு செயல்படுவதாக கூறியுள்ளார். அது தொடர்பான செய்திகள் ஆதாரமாக உள்ளது’ என்றார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள், ஆக. 1க்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்