SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு காய்ச்சலுக்காக ஊசி போட்டதும் 14 குழந்தைகளுக்கு திடீர் வலிப்பு

2017-07-18@ 00:50:35

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்காக ஊசிபோட்ட 14 குழந்தைகளுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆனைமலை, மீனாட்சிபுரம், ராமபட்டினம் மற்றும் நகர் பகுதியை சேர்ந்த  25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இந்த குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் இரவில், ஊசி மூலம் தொற்றுநோய் நீக்க மருந்து போடப்பட்டது. சிறிது நேரத்தில், 14குழந்தைகளுக்கு திடீர் என காய்ச்சல் அதிகரித்ததுடன், வலிப்பும் ஏற்பட்டது. சில குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கமும் வந்துள்ளது.

இதையறிந்த பெற்றோர் பதறியபடி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்தனர். உடன், டாக்டர்கள் சென்று, குழந்தைகளுக்கு மாற்று மருந்து செலுத்தினர். அதன்பிறகே அந்த குழந்தைகள் சகஜ நிலைக்கு திரும்பினர். இருப்பினும், அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 9 மாத குழந்தையை, மேல்சிகிச்சைக்காக நேற்று காலையில் டாக்டர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளுக்கு, போடப்பட்ட தொற்றுநோய் நீக்க ஊசி மருந்து பாட்டில்களை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்(பொறுப்பு) டாக்டர் கலைசெல்வி கூறுகையில், ‘’மருந்து குழந்தைகளுக்கு ஏற்காமல், அவர்களுக்கு குளிர் நடுக்கம் வந்தது. மருத்துவ குழுவினர் சிகிச்சை மூலம் அதை சரிசெய்துவிட்டனர்’’ என்றார்.

சஸ்பெண்ட்
கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணன் விசாரித்து, சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த செவிலியர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ேமலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், செவிலியர்களிடம் இன்று நேரில் அவர் விசாரணை நடத்துகிறார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்