SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரத்தில் கலாம் மணி மண்டபம் 27ம் தேதி திறப்பு

2017-07-18@ 00:50:33

சென்னை: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 50 கோடி செலவில் மண்டபம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி கலாமின் நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. வருகிற 27ம் தேதி கலாம் நினைவு நாளின் போது மணிமண்டபத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

மணிமண்டப திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: வருகிற 27ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி சிறப்பான ஏற்பாடுகளை தமிழக பாஜவினர் செய்து வருகின்றனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்