SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறையில் செல்போன் பிடிபட்டால் காவலர்கள் மீது நடவடிக்கை

2017-07-18@ 00:50:29

நெல்லை: தமிழக சிறைகளில் செல்போன், போதை பொருட்கள் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.  தமிழக சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டனை மற்றும் விசாரணை கைதிகளிடம் சிறை அதிகாரிகள், காவலர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக என்னென்ன வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  தமிழக சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள் நடமாட்டமும், கஞ்சா உட்பட போதை பொருட்களின் புழக்கம் இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தவுள்ளனர். இதனை மீறி சிறைகளில் செல்போன், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கைதிகளின் மறுவாழ்விற்காக தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விவசாயம், டெக்ஸ்டைல்ஸ், ஹாலோ பிளாக்ஸ் தயாரிப்பு உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மத்திய சிறையில் பேக்கரி துவக்கப்பட்டுள்ளது. அங்கு தயாரிக்கப்படும் பிஸ்கட், ரொட்டிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பாளை மத்திய சிறையிலும் பேக்கரி துவக்கப்படவுள்ளது. காலணி தயாரிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • navarathri_festivall111

    நவராத்திரி திருவிழா : வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனம் ஆடி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • duussera_festivalll1

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 22-09-2017

    22-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • MEXICOEArthqauke

    நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மெக்சிகோ நகரம்: மீட்பு பணிகள் தீவிரம்!

  • KAMAL

    நடிகர் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு: அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையா?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்