SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துண்டு பிரசுரம் விநியோகித்ததாக கைதான மாணவி மீது குண்டாஸ் பாய்ந்தது

2017-07-18@ 00:50:23

சேலம்:  சேலம் வீராணம் அருகே, பள்ளிக்கூடதாதனூரை சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி(23), கல்லூரி மாணவி. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி முன், ஜெயந்தி என்பவருடன் இணைந்து துண்டுபிரசுரம் விநியோகித்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும், கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்து, சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். வளர்மதி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி வளர்மதி  மீது சிவகங்கை, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் 6 வழக்குகள் உள்ளது. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, துணை கமிஷனர் சுப்புலட்சுமி, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் கமிஷனர் சஞ்சய்குமாருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கமிஷனர், வளர்மதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதன்படி வளர்மதி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதன்பின்னர்,  சேலம் சிறையில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்