சூரிய மின்சக்தி மூலம் ரயில்கள் இயக்கம்: இந்திய ரயில்வே திட்டம்

2017-07-17@ 21:09:05

திருச்சி: சூரிய மின் சக்தியில் இயங்கும் ரயிலை வடிவமைக்கும் முயற்சியை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னை பெரம்பூரில் வடிவமைக்கப்பட்ட சூரிய மின் சக்தியில் இயங்கும் பெட்டிகளுடன் கூடிய ரயில் என்ஜின் சமீபத்தில் டெல்லி பகுதியில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையும், இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் நிறுவனமும் இணைந்த ரூ. 13.54 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள 6 பெட்டிகளுடன் கூடிய இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயிலின் வெள்ளோட்டம் டெல்லி சப்தர்ஜிங் நிஜாமுதின் இடையே கடந்த 14ம்தேதி நடத்தப்பட்டது.
இதில் ஒரு பெட்டிக்கு 4.5 கிலோவாட் திறன் கொண்ட 16 சூரிய மின்சக்தி சேமிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.அவற்றை பொருத்துவதற்கு பெட்டிக்கு ரூ. 9 லட்சம் வீதம் ரூ. 54 லட்சம் செலவில் சூரிய மின் சக்தி சேமிக்கும்் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. உச்சி வெயில் வேளையில் 300 கி. வாட் வரை மின்சாரம் தயாரிக்கும் வகையில் உபரி மின்சாரம் 120 ஆம்பியர் ஹவர் பேட்டரியில் சேமிக்கப்பட்டு 72 மணி நேரம் வரை வினியோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்திலும் சேமிக்கப்பட்ட சூரிய மின்சக்தியை பயன்படுத்த முடியும்.ரயில் பெட்டிகளில் உள்ள மின்சார சாதனங்களான விளக்குகள், விசிறிகள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு இந்த மின்சாரம் போதுமானதாக உள்ளது. ஆனால் ரயி்லை இயக்க இது போதாது. அதற்கு வேறு மின்சாரம் பயன்படுத்தப்படும்.
பொதுவாக 6 பெட்டிகள் கொண்ட ஒரு டெமு ரயிலுக்கு ஆண்டுக்கு 21,000 கிலோ லிட்டர் டீசல் (தொகை மதிப்பு ரூ. 12லட்சம்) மிச்சமாகும். அந்த வகையில் டீசல் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு ஆண்டுக்கு 28,74,350 லிட்டர் தேவைப்படுகிறது.எனவே இந்த திட்டம் முக்கிய ரயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு 1.2 லட்சம் கிலோ லிட்டர் வரை சேமிக்க முடியும்.மேலும் டீசலை சேமிக்க குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் சூரிய மின்சக்தி மூலம் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் செய்திகள்
தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே பாதுகாப்பானது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து கொள்ளை : அரசு மருத்துவர் உட்பட 4 பேர் கைது!
முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இந்தியா பின்தங்கியிருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் கருத்து
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 5 பேர் பலி : எல்லையில் பதற்றம் நீடிப்பு
பிரதமரின் வாக்குறுதிப்படி ரூ.15 லட்சம் டெபாசிட் எப்போது ? ஆர்.டி.ஐ.க்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
LatestNews
ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு
14:14
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் : மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 37ஆக உயர்வு
14:10
யானை தந்தங்கள் கடத்திய வழக்கில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் விடுதலை
14:07
கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
14:04
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வு
13:57
வங்கி மோசடி வழக்கு : டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
13:05