பணிநாட்கள் குறைப்பு கண்டித்து என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது

2017-07-17@ 20:34:58

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்தல், மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இந்நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு என்எல்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்கி வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதனை 19 நாட்களாக குறைத்து விட்டது.இதனைக்கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12ம்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 6வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் காலை 6 மணி அளவில் முதல்சுரங்க விரிவாக்க வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து நெய்வேலி கூடுதல் டிஎஸ்பி வேதரத்னம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இன்று காலை 5.30 மணி அளவில் நுழைவு வாயில் முன்பு 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் காலை 6 மணிக்கு முதல் ஷிப்ட் பணிக்கு செல்லும் நிரந்தர தொழிலாளர்களும், அதேபோல் இரவு பணி முடிந்து வெளியே வர காத்திருந்த தொழிலாளர்களும் அங்கேயே நிறுத்தப்பட்டனர்.இதையடுத்து முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கடல்சீற்றத்தால், தென் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்
காவிரி தண்ணீருக்கு ஏங்கும் பொதுமக்கள் : குடங்களுடன் அலையும் நிலை
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சொந்த கிராமத்தில் ரூ.8.50 லட்சத்தில் குளங்களை தூர்வாரிய பட்டதாரி பெண்
கொடைக்கானல் அருகே நூற்றுக்கணக்கில் அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டிடங்கள்
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் : மா, பலா, வாழைகள் நாசம்
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு : கிராம மக்கள் விடிய விடிய தவிப்பு
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
LatestNews
ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு
14:14
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் : மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 37ஆக உயர்வு
14:10
யானை தந்தங்கள் கடத்திய வழக்கில் இருந்து வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் விடுதலை
14:07
கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
14:04
மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வு
13:57
வங்கி மோசடி வழக்கு : டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
13:05