SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கதிராமங்கலம் மக்கள் இன்று முதல் உண்ணாவிரதம்: போலீஸ் வெளியேற வலியுறுத்தல்

2017-07-17@ 19:56:48

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடந்து வருகிறது.கடந்த 12ம் தேதி முதல் கதிராமங்கலம் மக்கள் அங்குள்ள எல்லை அய்யனார் கோயில் திடலில் முகாமிட்டு அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கதிராமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வனதுர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன பேரணி நடத்தினர்.

மேலும் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். கதிராமங்கலம் அனைத்து வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த பெரும்பாலான வெளியூர் மாணவர்களை போலீசார் கதிராமங்கலத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். அப்படியிருந்தும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காத்திருப்பு போராட்டத்துக்குள் வந்தார். போலீசார் அவரை வெளியேற்ற முயன்றபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவரை விட்டு விட்டனர்.இன்று 7ம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. கைதான 10 பேருக்கும் ஜாமீன் வழங்காததை கண்டித்து இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

எண்ணெய் நிறுவன பாதுகாப்புக்காக வரும் போலீசார் பொதுமக்களைப் போல், சீருடை அணியாமல் காத்திருப்பு போராட்டத்தில் அவர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு வெளியே போகும்படி சொன்னாலும் அவர்கள் வெளியேறவில்லை.போலீசார் கிராமத்தை விட்டு வெளியேறாவிட்டால், பொதுமக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறும் போராட்டத்தை நடத்த அடுத்தகட்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.இதை அறிந்த போலீசார் இன்று அதிக அளவில் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X