SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகொரியாவுடன் இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா அழைப்பு

2017-07-17@ 17:58:31

சியோல்: அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணையை ஏவி சோதித்து பார்த்து வந்த வடகொரியாவை தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தென்கொரியத் தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வரும் 21-ம் தேதி வடகொரியாவில் பன்முன்ஜோம் பகுதியில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரிந்த குடும்பங்கள் ஒருங்கிணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தென்கொரி‌யா அழைப்பு விடுத்துள்ளது. தென்கொரிய அதிபராக பதவியேற்ற மூன் ஜே இன், பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான பதற்றத்தை குறைக்க விருப்பம் தெரிவித்து வருவதால், இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை வடகொரியா மேற்கொண்டது. இத்தகைய சோதனைகளை நிறுத்திக் கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அமெரிக்கா வலியுறுத்தியும் வடகொரியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

இதற்கு சவால் விடும் வகையில் தென் கொரியா கடல் பகுதியில், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்தது. மேலும் போர் பயிற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் தென்கொரியா வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்