SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்வாதி கொலை நிகழ்ந்து ஓராண்டுக்கு பின் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

2017-07-17@ 17:32:00

சென்னை: பெண் பொறியாளர் ஸ்வாதி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையத்தில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்வாதி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு இல்லாததால் துப்பு துலக்க முடியாமல் விசாரணை தாமதம் ஆனது.

நுங்கம்பாக்கத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் குற்ற சம்பவங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisters

    பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்