SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியைகள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை : திரிபுராவில் சர்ச்சை

2017-07-17@ 17:10:35

அகர்தலா: திரிபுராவில் பள்ளி ஒன்றில் ஆசிரியைகள் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற நவீன உடைகளை அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள கஞ்சன்பூர் என்ற இடத்தில் இளம் ஆசிரியைகள் சிலர் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற நவீன ஆடைகளை அணிந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் குவிந்தன. இதனால் பதின் பருவத்தில் உள்ள மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மனம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஆசிரியைகள் நவீன ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கஞ்சன்பூர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சக்மா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து மூத்த ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்து விவாதித்தோம். இதையடுத்து ஆசிரியைகள் தங்களது பள்ளி நேரத்தின் போது நவீன ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் பாரம்பரிய உடையான சல்வார் கமீஸ் போன்றவற்றை அணிந்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.

இது வெறும் வாய்மொழி உத்தரவு தானே ஒழிய, யாரையும் அவர்களது ஆடை அணியும் முறையை கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த வித சுற்றறிக்கைகளும் விடப்படவில்லை என்றார். ஆனால் அதே நேரத்தில் கஞ்சன்பூரில் உள்ள மற்ற பள்ளிகளிலும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மூத்த அரசு ஆசிரியை ஆஷீத் தத்தா கூறுகையில், பணி நேரத்தின் போது அணியும் ஆடையானது ஒருவரின் ஆளுமையை பிரதிபலிப்பதாக, கண்ணியத்தை காட்டுவதாக இருக்க வேண்டும். அது ஆசிரியராக இருந்தாலும் சரி, ஊழியராக இருந்தாலும் சரி. ஆனால் அதே நேரத்தில் தனிநபர்கள் ஆடை அணிவதில் எந்த வித கட்டுப்பாடுகளும் விதிப்பதை ஏற்க முடியாது என்றார். தற்போது இந்த விவகாரம் திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • salemchennairoad

    பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

  • icffactorychennai

    சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

  • RaghulGandhi48thBday

    ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • IndonesiaTobaLake

    இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்