SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ச்சைகளின் மறு உருவானது பரப்பன அக்ரஹாரா சிறை: அதிகாரிகள் புடைசூழ துப்பாக்கி கேக் வெட்டிய கொலைக்கைதி

2017-07-17@ 16:59:56

பெங்களூரு: அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலைக்கைதி ஒருவர் அதிகாரிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரே சிறையில் பிறந்தநாள் கொண்டாடியவர் ஆவார். அரசியல் செல்வாக்கு, பணபலம் கொண்ட இவரது பிறந்தநாளை அமர்க்களப்படுத்த நினைத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கி வடிவிலான 6 கிலோ எடையுள்ள கேக்கை சொந்த செலவில் வரவழைத்தனர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஸ்ரீநிவாஸை அந்த கேக்கை வெட்ட வைத்த அதிகாரிகள் அகமகிழ்ந்து நின்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்படுவதாக டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதற்கு சான்றாக அமைத்துள்ளது கொலைக்குற்றவாளியின் பிறந்தநாள் விழா. பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை விசாரிக்கும் உயர்மட்ட குழு கொலைக்கைதி துப்பாக்கி கேக் வெட்டியதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathi_veedhulaa

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்

  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்