SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவப்படிப்பில் 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

2017-07-17@ 15:29:17

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது  என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ரவிச்சந்திரபாபு வழங்கினார். அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. மேலும் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் இடஒதுக்கீட்டு அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பீல் செய்துள்ளார். மத்திய பாடத்திட்டத்தில் சமனற்ற நிலையை களையவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தமிழக அரசின் அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5% இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்