SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மணிமண்டபத்தில் வைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

2017-07-17@ 14:46:23

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றி அவரது நினைவிடத்தில் நிறுவ தடை விதித்து உத்தரவிடக்கோரி சிவாஜி சமூக பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கடற்கரை சாலையில் மற்ற தலைவர்கள் சிலை அமைந்துள்ள இடத்தில் சிவாஜி சிலை நிறுவ வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த விசாரித்த உயர்நீதிமன்றம் மணிமண்டபத்தில் சிவாஜி சிலையை வைக்க தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் திறக்கப்படும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்