SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் கை, கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டு தமிழக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்

2017-07-17@ 14:20:37

புதுடெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் 2-வது நாளாக கை, கால்களை சங்கிலியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் தங்களை மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ள அய்யாக்கண்ணு, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் கோரி போராட்டம் நடத்தினர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்