SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனுக்கு பெருகி வரும் ஆதரவு

2017-07-17@ 12:19:18

சென்னை: அதிமுக அரசை விமர்சித்த நடிகர் கமலுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமல் ஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தனர்.

சி.வி.சண்முகம் தனது பேட்டியில், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு பறி போனதால் தற்போது 3-ம் தர நடிகராக கமல்ஹாசன் பேசி வருகிறார். பெண்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசனை மிரட்டும் வகையில் பேட்டி கொடுத்த அமைச்சர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். தனக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் பேட்டி அளித்து உள்ளனர்.

இந்நிலையில் ஓ.பிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமே தவிர அவரை குறைசொல்லக்கூடாது என கே.பி. முனுசாமி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சிப்பது, அவர்களது மரியாதையை குறைக்கும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்

இதனிடையே அதிமுக அரசு ஊழல் குறித்த கமலின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து கூற உரிமை உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கமலை மிரட்டுகின்ற வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்

கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்வேன் எனக் கூறும் அமைச்சர்கள், என் மீது வழக்கு தொடர தயங்குவது ஏன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் அச்சுறுத்தி மிரட்டுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனவும் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்