SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது

2017-07-17@ 12:17:37

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 வாக்குகளில் 2 பேரை தவிர அனைவரும் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல் ஆளாக வந்து தங்களது வாக்கை செலுத்தினர். இதையடுத்து எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 232 எம்எல்ஏக்களும் கேரள எம்எல்ஏ ஒருவரும் வாக்களித்தனர். இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் வாக்களித்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி தவிர அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதேபோல் ஜெயலலிதா காலமானதால் ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்