SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணியில்லா காட்டில் மணப்பெண் சீதனமாக தண்ணீர் தள்ளுவண்டி : எல்லாம் பஞ்சம் படுத்தும்பாடு

2017-07-17@ 11:45:20

சாயல்குடி:  ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்யாண சீர்வரிசையுடன் தண்ணீர் பிடிக்கும் தள்ளுவண்டியையும் வழங்குவது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில், 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் ஒரு குடம், இரண்டு குடம்தான் கிடைக்கிறது. இதனால் பல கிமீ தூரம் சென்று காவிரி குழாயில் கசியும் தண்ணீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

நீண்ட தூரம் குடங்களை தூக்கி சுமக்க முடியாததால், இப்பகுதி மக்கள் தள்ளுவண்டியை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வண்டியில் அதிகபட்சமாக 5 குடம் வரை எடுத்து செல்லலாம். ‘தண்ணியில்லா காடு’ என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில், தண்ணீர் பஞ்சம் தவிர்க்க முடியாது என்பதால், தள்ளுவண்டி இப்பகுதி மக்களின் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இது ஒருபுறமிருக்க, இம்மாவட்டத்தில் மணப்பெண்ணுக்கான கல்யாண சீர்வரிசையிலும் தள்ளுவண்டி இடம் பெற்றுள்ளதுதான் இன்பத்திலும் உள்ள துன்பம்.

இதுகுறித்து கடலாடியை சேர்ந்த பசுபதி கூறுகையில், ‘‘எங்கள் பகுதி மக்கள் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று காவிரி குழாயில் வழியும் தண்ணீரை பிடித்து வருகின்றனர். இதற்காக எடுத்துச்செல்லும் தள்ளுவண்டியை, இரும்பு பட்டறைகளில் ரூ.3,500 முதல் விலைக்கு வாங்கி வருகிறோம். எனது மகள்கள் இருவருக்கும் தள்ளுவண்டிகளை சீதனமாக வழங்கியுள்ளேன். தமிழக அரசு எங்கள் மாவட்டத்தில் குடிநீர் நிலையை மனதில் கொண்டு, மானிய விலையில் தள்ளுவண்டியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்