SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிபட்டி பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் கால்நடைகள் தவிப்பு

2017-07-17@ 11:43:34

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் பசுமை இல்லாததால், கால்நடைகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது.  ஆண்டிபட்டி பகுதியில் தொழு மாடுகள், தொழு ஆடுகள் வளர்த்து ஆங்காங்கே கிடை அமர்த்தி அதன் மூலம் வரும் வருவாயை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். முப்போக விளைந்த ஆண்டிபட்டி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாமல் விவசாயம் கேள்விக்குறி ஆகி, விளை நிலங்கள் தரிசுகளாக மாறிவிட்டன. கால்நடை வளர்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கால்நடைகளை மேய்த்து வந்தனர்.

இந்நிலையில், மலைச் சுனைகளிலும், தடுப்பணைகளிலும் நீர் இல்லாததால் ஆடு, மாடுகள் தவித்து வந்தன. இருப்பினும் ஆங்காங்கே கிணற்று பாசனத்தை நம்பி, விவசாயம் செய்யும் பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்த்து ஓரளவு சமாளித்தனர். தொடர்ந்து விவசாயம் நடைபெற்றால் மட்டுமே, நிலங்களுக்கு உரம் ஏற்ற கிடை அமைக்க கிராக்கி ஏற்படும். ஆனால் தற்போது விவசாயம் முழுமையாக இப்பகுதியில் இல்லாமல் போனதால், கிடை அமர்த்த வேலையே இல்லாமல் போனது. தற்போது பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் குறைந்தளவு தண்ணீரினால் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழுமாடுகள், ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் உள்ளது.எனவே, கால்நடை வளர்ப்போர் பல கிலோ மீட்டர் தூரம் ஆடுகளை ஓட்டி வந்து, வைகை கரையோரங்களில் மேய்ச்சலுக்கு விட்டு, தண்ணீர் குடிக்கச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை வளர்க்கம் முருகன் கூறுகையில், ‘கடந்த பல மாதங்களாக மழை தண்ணீர் இல்லாததால், ஆடு, மாடுகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமபட்டு வருகிறோம். இந்நிலையில் வறட்சியின் காரணமாக ஆடுகளுக்கு வெப்பல், கழிச்சல், கான நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு பல ஆடுகள் இறக்க நேரிடுகிறது. கிடையாடுகளுக்கு, மருத்துவர்களை அழைத்து வந்து வைத்தியம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எங்களுக்கு ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாததால், செய்வதறியாமல் திகைத்து வருகின்றோம். மழை பெய்து பூமி செழித்தால் மட்டுமே, நாங்கள் மூன்று வேலை நிம்மதியாக சாப்பிட முடியும்’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

 • road_safetyr

  சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்