SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு

2017-07-17@ 10:42:12

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 16.63 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.69 புள்ளிகள் உயர்ந்து 32,094.44 புள்ளிகளாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உலோகம், ஆட்டோ, வங்கி, எண்ணெய்&எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட நிறுவன பங்ககள் விலை உயர்ந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25.60 புள்ளிகள் அதிகரித்து 9,911.95 புள்ளிகளாக உள்ளது.

விப்ரோ, அதானி துறைமுகம், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், எம் & எம், ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 3.26% வரை அதிகரித்திருந்தது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.53%, மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.09% உயர்ந்துள்ளபோது, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.46% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.39% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

  • ANDHIRA_MANILAM11

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்