SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விம்பிள்டனில் 8வது முறையாக சாம்பியன் ரோஜர் பெடரர் மகத்தான சாதனை

2017-07-17@ 00:05:03

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேர் செட்களில் வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெடரர் (35 வயது, 3வது ரேங்க்) - மரின் சிலிச் (28 வயது, 7வது ரேங்க்) மோதினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

காயம் காரணமாக தடுமாறிய சிலிச், 2வது செட்டில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடினார். பெடரர் 2வது செட்டை 6-1 என கைப்பற்றி முன்னிலையை அதிகரித்தார். மூன்றாவது செட்டில் சிலிச் கடுமையாகப் போராடிய நிலையில், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.

விம்பிள்டனில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் (சாம்ப்ராஸ், ரென்ஷா தலா 7 முறை)  மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைகள் அவரது வசமாகின. இது அவர் வெல்லும் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முழங்கால் மூட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெடரர், நீண்ட ஓய்வுக்குப் பிறகு நடப்பு சீசனில் 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் (ஆஸி. ஓபன், விம்பிள்டன்) பங்கேற்று இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாதனை வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X