SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு நெருக்கடி

2017-07-17@ 00:05:00

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறது. டிரெட்ன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன் குவித்தது. அம்லா 78, டி காக் 68, பிலேண்டர் 54 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, பிராடு 3, ஸ்டோக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 78 ரன் எடுத்தார். பேர்ஸ்டோ 45, பேலன்ஸ் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மோரிஸ் 3, மார்னி மார்கெல், பிலேண்டர், மகராஜ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 130 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 69 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்தது. ஹெய்னோ 8, டி காக் 1 ரன்னில் வெளியேற, டீன் எல்கர் 80, அம்லா 87 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை பெற்றுள்ளதால், இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_ai11

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்