SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கந்தர் 97*, வாலர் 57* ஜிம்பாப்வே முன்னிலை

2017-07-17@ 00:04:58

கொழும்பு: இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன் குவித்து கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் அதிகபட்சமாக 160 ரன் விளாசினார். இலங்கை பந்துவீச்சில் ஹெராத் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்திருந்தது. தரங்கா 71, கேப்டன் சண்டிமால் 55, மேத்யூஸ் 41, தில்ருவன் 33 ரன் எடுத்தனர். அசெலா குணரத்னே 24, ஹெராத் 5 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஹெராத் 22, லக்மல் 12, குணரத்னே 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  ஜிம்பாப்வே பந்துவீச்சில் கிரீமர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 10 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, ஹெராத் சுழலில் முதல் 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க 23 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஷான் வில்லியம்சும் 22 ரன் எடுத்து ஹெராத் சுழலுக்கு பலியானார்.

சிக்கந்தர் - பீட்டர் மூர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தது. மூர் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன் குவித்துள்ளது. சிக்கந்தர் 97, மால்கம் வாலர் 57 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, ஜிம்பாப்வே அணி 262 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்