SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதி!

2017-07-16@ 18:00:48

புதுடெல்லி: இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் ஆன்லைன் சூதாட்டத்தை சட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் சூதாட்டம் என்றாலே கிரிக்கெட் விளையாட்டு தான் நினைவுக்கு வரும். முக்கிய போட்டிகளின் போது கோடிக்கணக்கில் பணம் புரல்வதை அறிந்த போலீசார் பொறி வைத்து சிலரை பிடிப்பதும் அவர்களிடம் இருந்து குறைந்த அளவில் பணத்தை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் விளையாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை சட்டமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் இதனை மறுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆன்லைன் சூதாட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதனால் அந்நாட்டின் உதவியை நாடியுள்ள மத்திய அரசு இது குறித்து அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இது முழு வடிவம் பெற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என்றும் விளையாட்டு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை குதிரைப் பந்தயத்தில் மட்டும் சூதாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்