SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்த்தாலே நா ஊறும் செம... செம டேஸ்ட் செங்கப்படை சீரணி

2017-07-16@ 00:26:15

திருமங்கலம்: மதுரை மாவட்டத்துக்குள்ளே ‘என்டர்’ ஆனாலே, ஏராளமான சுவைமிக்க உணவுகள் கொட்டி கிடக்கின்றன. சாப்பிடத்தான் நேரம் ஒதுக்க வேண்டும். அவற்றில் ஒன்றுதான் ‘செங்கப்படை சீரணி’. அதென்ன... செங்கப்படை சீரணி? மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது செங்கப்படை கிராமம். அங்கு பல தலைமுறைகளாக சீரணியை தயாரித்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இக்குடும்பம் ஆண்டாண்டு காலமாய் செய்து வரும் சீரணியை வாங்க குவியும் கூட்டம் இன்று வரை குறைந்தபாடில்லை. நிறைந்த தரம்.. இனிமையான சுவை...  இரண்டும்தான் விற்பனைக்கு சான்றாக இருக்கின்றன.

சுந்தரம்மாளிடம் பேசினோம்... ‘‘செங்கப்படை சீரணி தயாரிப்பு முறையிலேயே வித்தியாசம் உள்ளது. மற்ற பகுதிகளில் தேங்காய் சிரட்டையால் சீரணியை  சுற்றுவார்கள். நாங்கள் அப்படி செய்வதில்லை. துணியால் சுற்றி சீரணி  தயாரித்து தருகிறோம். ஒரு வாரம் வரை கெட்டு போகாது.  திருமங்கலம் மட்டுமின்றி மதுரை, தேனி, கம்பம், சென்னை வரையில் செங்கப்படை  சீரணி புகழ் வாய்ந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் முக்கிய விசேஷங்களின்போது, தாம்பாள தட்டில் சீரணி இல்லாமல் இருக்காது. விருந்தினர் வந்தாலும் அவர்களுக்கு தரும் முதல் பலகாரமாக சீரணிதான் இருக்கும். நாள்தோறும் 2 கிலோ மாவில் தயாரிப்போம். ஆர்டரின்பேரிலும் செய்து தருகிறோம்...’’ என்கிறார்.

தேவையானவை

பச்சரிசி  -  ஒன்றரை கிலோ
உளுந்து  -  அரை கிலோ
ஜீனி  -  3 கிலோ
சுக்கு, ஏலக்காய் சிறிதளவு

செய்முறை: பச்சரிசியை நன்கு கழுவி 3 மணிநேரம், உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசி, உளுந்தை அரைத்து மாவாக்கி கொள்ளவேண்டும். அதே நேரத்தில் ஜீனியை தண்ணீரில் கரைத்து பாகுவாக்க வேண்டும். இதமான சூட்டிற்கு பாகு வந்ததும், அதனை தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். இப்போது ஏலக்காய், சுக்கை தட்டி போட வேண்டும். இப்போது அரைத்த மாவை துணியை கொண்டு வட்ட வடிவில் சீரணியாக வாணலியில் பொறிக்கவும். பொறித்த சீரணியை அப்படியே எடுத்து ஜீனி பாகுவுடன் கலக்கவும். சுமார் அரை மணிநேரத்தில் பாகுவில் ஊறியவுடன் எடுத்தால் சூடான, சுவையான சீரணி தயார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • neelakkrinji11

  பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்குகிறது

 • bhuvaneshkumar_marriage

  இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

 • PrimeMinisters

  பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

 • 24-11-2017

  24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • YuvaraniVinayakaPrize

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்