SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கார் விற்பனை 85 சதவீதம் வரை வீழ்ச்சி

2017-07-16@ 00:26:00

ஜிஎஸ்டி காரணமாக பெரும்பாலான வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது. ஆனால், அவை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபமாக அமையவில்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு வாகனங்களை வாங்கலாம் என வாடிக்கையாளர்கள் மே மாதம் தொடக்கத்திலே முடிவு எடுத்துவிட்டனர். அதனால் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்துக்கான கணக்கு முடிவில் கணிசமான நஷ்டத்தை சந்தித்துள்ளன.
மாருதி சுசுகியை பொறுத்தவரை ஜூன் மாத முடிவு, கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் லாப அளவை தந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், மாருதி சுசுகியை தவிர மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல ஜூன் மாதத்தில் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. மாருதி சுசுகி தான் வெற்றியாளராக இருந்தாலும், ஜூன் மாதத்தில் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கை மே மாதத்தை விட குறைவுதான். விட்டாரா பிரஸ்ஸா கார் அந்நிறுவனத்திற்கு கடந்த மாதத்தில் நல்ல லாபத்தை அளித்துள்ளது. யுட்டிலிட்டி வாகனங்களுக்கான விற்பனை கடந்த ஆண்டைவிட மாருதிக்கு 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் மொத்தம் 37,650 கார்களை விற்றுள்ளது. ஆனால், இது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவுதான். ஹூண்டாய் நிறுவனம், மே மாதம் செய்த வர்த்தக முடிவின்படி ஜூன் மாதத்தில் அதனுடைய விற்பனை திறன் 10 சதவீதம் குறைந்துள்ளது. இருந்தாலும், நடைபெற்று முடிந்த காலாண்டு மதிப்புப்படி, ஹூண்டாய் நிறுவனம் 4.1 சதவீத வளர்ச்சியை இந்தாண்டில் அடைந்துள்ளதாக சந்தை மற்றும் விற்பனை அதிகாரி ராகேஷ் வத்ஸவா தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி மாற்றத்தால் ஜூன் மாத முடிவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சரியான வளர்ச்சியே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டில் ஜிஎஸ்டி அமலாகத்திற்கு முன்பு வரை, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா போன்ற கார்கள் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சூப்பர் ஃபெர்பார்மராக இருந்துள்ளன. ஃபோர்டு நிறுவனத்தின் நிலைமைதான் மிக மோசமாக இந்த பட்டியலில் உள்ளது. ஜூனில் ஃபோர்டு மொத்தம் 6,149 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது 2017 ஜூன் மாதத்தில் ஃபோர்டு கார் 35 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவை தாண்டி வெளிநாட்டு விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் உள்ளூர் விற்பனை பிரிவில் 3 சதவீத வீழ்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் மஹிந்திராவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், வணிக வாகனங்களின் விற்பனையில் மஹிந்திராவிற்கு ஜூன் மாதம் ஏறுமுகமாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் வணிக வாகன விற்பனையில் மஹிந்திரா 12 சதவீத விற்பனையை அதிகமாக பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு, ஜூன் மாத கணக்கு முடிவில், டாடா நிறுவனமும் இறங்கு முகத்தைத்தான் சந்தித்துள்ளது.  டாடாவின் தயாரிப்புகள் ஜூன் மாதத்தில் 40,358 அளவில் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. ஆனால், பிஎஸ் 4 அமலாக்கத்திற்கு பிறகு வணிக வாகன விற்பனை உயர்ந்து வருவதாகவும், ஜிஎஸ்டி-யினால் ஏற்பட்ட வாடிக்கையாளர் மனக்குழப்பம் ஜூன் மாத விற்பனையை பாதித்துள்ளதாகவும், பயணிகள் வாகனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் டாடா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஜூன் மாத கணக்கு முடிவில் அதிக நஷ்டத்தை சம்பாதித்து இருப்பது டொயோட்டா நிறுவனம்தான். கிட்டத்தட்ட கடந்த மாதத்தில் 85 சதவீத விற்பனை வீழ்ச்சி டொயோட்டாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், டொயோட்டா நிறுவனம் மொத்தம் 1,973 கார்களை மட்டுமே கடந்த ஜூனில் விற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜிஎஸ்டி தாக்கத்திற்கு பிறகு இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளபடி, டொயோட்டா நிறுவனத்தின் எஸ்.யூ.வி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

* ஜிஎஸ்டி-யினால் ஏற்பட்ட வாடிக்கையாளர் மனக்குழப்பம் ஜூன் மாத விற்பனையை பாதித்துள்ளதாகவும், பயணிகள் வாகனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் டாடா  தகவல் வெளியிட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்