SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஹோண்டா க்ளிக் 110 சிசி ஸ்கூட்டர்!

2017-07-16@ 00:25:58

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புதிய ‘’க்ளிக்’’ ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் க்ளிக் ஒரு தனித்துவமான டிசைன் கொண்ட யுடிலிட்டி ஸ்கூட்டர் ஆகும். இதன் ஒட்டுமொத்த டிசைனும் நவி ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டுள்ளது. இருப்பினும் இதன் பாடி வேலைப்பாடுகள் இதர ஸ்கூட்டர்களில் இருந்து, இதனை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. க்ளிக் ஸ்கூட்டர் கிராமப்புற பகுதி மக்ககளை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டரில் பெரிய சீட், அதிகமான ஸ்டோரேஜ் வசதி, டியூபுலர் க்ரேப் ரெயில் என தனித்துவ அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் சீட் உயரம் 743 மி.மீ என குறைவானதாக உள்ளது. மேலும், இது பெண்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களும் எளிதில் இதனை ஹேண்டில் செய்ய முடியும்.

எடை குறைவானதாகவும், அகலம் குறைவானதாகவும் இருப்பதால், பெண்களால் இதனை எளிதாக ஓட்டவும், ஹேண்டில் செய்ய முடியும். இதில், 3.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இது, நவி மற்றும் ஆக்டிவா மாடல்களை காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும், புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டரில் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம், பிளாக் பேட்டர்ன் டயர், அகலமான காலடி வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, டியூப்லெஸ் டயர் மற்றும் பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி என பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்புதிய ஹோண்டா க்ளிக்-ல் அதிகபட்சமாக 8.04 பிஎச்பி ஆற்றலையும், 8.94 என்.எம் டார்க்கையும் வழங்கவல்ல 109.19 சிசி இன்ஜின் உள்ளது. இது, அதிகபட்சமாக மணிக்கு 83 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது. ரூ.45,499 (டெல்லி எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. விலை அடிப்படையில் பார்க்கும்போது டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி ஸெஸ்ட் மாடல் புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் என கருதப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்