SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஸ்போர்ட்டில் சீனா புது சர்ச்சை

2012-11-24@ 01:52:30

புதுடெல்லி :  இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தை தனக்கு  சொந்தமான  பகுதியாக காட்டி பாஸ்போர்ட்டில் சீனா வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா , சீனா இடையே எல்லைப் பிரச்னை பல ஆண்டாக இருந்து வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தில் தன் ராணுவ ஹெலிகாப்டரை இறக்குவது, ஹெலிபேட் அமைக்க முயற்சிப்பது  என்றெல்லாம் அவ்வப்போது வம்பு செய்து வந்துள்ளது சீனா.

இது தொடர்பாக அவ்வப்போது பேசி வந்தாலும், சீன அரசு சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த வகையில், சமீபத்தில் தன் மக்களுக்கு அளித்துள்ள பாஸ்போர்ட்டில், இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தை, தனக்கு சொந்தமான பகுதியாக காட்டி வரைபடம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவுக்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றாலும், இந்தியாவுக்கு வந்த சீனர்களின் பாஸ்போர்ட்களில், இந்தியாவுக்கு சொந்தமான மாநிலமாக அருணாச்சல்லை காட்டும் புதிய வரைபடத்தை இணைத்துள்ளது. அதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தியா தனது எல்லைகள் அடங்கிய வரைபடத்தை இந்தியா வரும் சீனர்களின் பாஸ்போர்ட்டில் பதித்து வருகிறது.

காஷ்மீரின் லடாக்  பகுதியில் உள்ள அக்சாய் சின் மலைப்பகுதியையும் தனக்கு சொந்தமான பகுதியாக எல்லையை நீட்டி வரைந்துள்ளது. எல்லைப்பிரச்னை தொடர்பாக இன்னும் சில வாரத்தில் சீனாவுக்கு மத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவகங்கர் மேனன் செல்ல உள்ளார். இந்த நிலையில், இப்படி ஒரு சர்ச்சையை சீனா கிளப்பி விட்டுள்ளது. இதற்கு முன்பு அருணாச்சல், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சீனா விசா தர மறுத்தது.

கேட்டால், இரண்டுமே எங்கள் பகுதி தானே, விசா இல்லாமலேயே தாராளமாக வந்து செல்லுங்கள் என்று கிண்டல் அடித்தது. இது போல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தனி விசா தந்தது. கேட்டால், அது இந்தியாவின் பகுதி  அல்ல; தனி நாடு என்று வெறுப்பேற்றியது.   இப்போது பாஸ்போர்ட்டிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
sinemet megaedd.com sinemet
abortion pill procedures late term abortion pill having an abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்